என்னது!! இந்த கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கலைனா சிங்கப்பூருக்குள்ள விட மாட்டாங்களா?!

என்னது!! இந்த கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கலைனா சிங்கப்பூருக்குள்ள விட மாட்டாங்களா?!

இமிகிரேஷனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் மட்டுமே உங்களால் 2025 ஆம் ஆண்டு சிங்கப்பூர் செல்ல முடியுமா?

சிங்கப்பூரில் ஆட்டோமேட்டிக் இமிக்ரேஷன் உள்ளது.

ஆனால் டூரிஸ்ட் விசாவில் செல்வோர்களை என்குயரி இல்லாமல் சிங்கப்பூருக்குள் அனுமதிப்பது இல்லை.

ஏனென்றால் டூரிஸ்ட் விசாவில் சென்று விட்டு அங்கு நிறைய நாட்கள் தங்கி விடக் கூடாது.டூரிஸ்ட் விசாவில் சென்றால் சுற்றிப் பார்க்க மட்டும் தான் செல்ல வேண்டும்.

சுற்றிப் பார்க்க மட்டும் செல்கிறீர்களா என்பதை உறுதி செய்த பிறகு தான் சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதி வழங்குவார்கள்.

டூரிஸ்ட் விசாவில் சுற்றிப் பார்க்க செல்லாமல் அங்கு வேலைக்கு எதுவும் செல்வதாக அவர்கள் சந்தேகம் அடைந்தாலே உங்களை Deport அதாவது விசாவை கேன்சல் செய்து இந்தியாவிற்கே அனுப்பிவிடுவார்கள்.

டிபோர்ட் செய்து சிங்கப்பூரிலிருந்து உங்களை திருப்பி அனுப்பி விட்டால் மறுபடியும் சிங்கப்பூர் செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று ஆகும்.

சில பேர் டீபோர்ட் ஆனாலும் 14A Form பூர்த்தி செய்தால் அங்கு சென்று விடலாம் என்று கூறுவார்கள்.

ஆனால் அவ்வாறு செய்தும் கூட சிங்கப்பூருக்குள் செல்ல முடியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அதனால் முடிந்தவரை சிங்கப்பூருக்குள் செல்லும் முன் அங்கு என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் .அதற்கு எவ்வாறு பதில் அளிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு செல்லுங்கள்.

நீங்கள் சிங்கப்பூருக்கு எந்த விசாவில் செல்கிறீர்களோ அதற்கென டாக்குமெண்ட்கள் இருக்கிறது.டூரிஸ்ட் விசாவில் செல்வதாக இருந்தால் உங்களிடம் கேள்விகள் கேட்கப்படும்.

ஆங்கிலத்தில் தான் அங்கு கேள்விகள் கேட்பார்கள் தமிழில் கேட்க மாட்டார்கள்.

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் மட்டும் போதும் நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் டூரிஸ்ட் விசாவில் செல்வதாக இருந்தால் உங்கள் கையில் விசா இருக்க வேண்டும்.

அதேபோல உங்களுடைய பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

சிங்கப்பூரிலிருந்து திரும்ப வருவதற்கான டிக்கெட்டும் புக் செய்திருக்க வேண்டும்.

1.How much money you have ?

நீங்கள் அங்கு செல்வதால் செலவுக்கான பணம் வைத்திருக்கிறீர்களா என்பதை கேட்டு தெரிந்து கொள்வார்கள்.அங்கு somany என்று கூறுவார்கள்.உங்கள் கையில் குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இந்திய ரூபாய் மதிப்பில் வைத்திருப்பது நல்லது.

2.What purpose of vist?

அடுத்ததாக எதற்காக சிங்கப்பூர் செல்கிறீர்கள் என்பதை அவர்கள் விசாரிப்பார்கள்.நீங்கள் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்றால் சுற்றிப் பார்க்க மட்டும்தான் செல்ல வேண்டும்.அங்கு சென்று வேலை தேடிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சென்றால் அது சட்டத்திற்கு புறம்பானது.

3.How many days stays?

விசாவில் விசாவுக்கான கால அவகாசம் இருக்கும் .
அதில் கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று மாத கால அவகாசம் வரை அங்கு இருக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர்.ஆனால் அது தவறு .
அந்த மூன்று மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் சிங்கப்பூர் செல்லலாம் என்பதே அதன் அர்த்தம்.நீங்கள் சிங்கப்பூருக்கு சென்ற நாளிலிருந்து ஒரு மாதக் கணக்கு அதாவது 30 நாட்கள் மட்டுமே இருக்க முடியும். 30 வது நாள் நீங்கள் இந்தியாவிற்கு திரும்பி விட வேண்டும்.எத்தனை நாட்கள் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் கூற வேண்டும்.நீங்கள் 30 நாட்களுக்கு மேல் அங்கு இருக்க வேண்டும் என்றால் 10 நாட்களுக்கு முன்னதாகவே அப்ளை செய்ய வேண்டும்.அப்ரூவல் கிடைத்து விட்டாலும் கூடுதலாக ஒரு மாதம் இருக்கலாம்.

4.Visa sponsor ID proof

உங்களுக்கு விசா அப்ளை செய்வதற்கு யார் sponsor செய்தார்களோ அவர்களுடைய id proof,மொபைல் நம்பர் கேட்டு தெரிந்து கொள்வது மிக முக்கியம்.அவர்கள் கேட்கும் போது ஐடி ப்ரூப்,தொலைபேசி எண் தெரிவிக்க வேண்டும்.நீங்கள் கொடுத்த மொபைல் நம்பரைத் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.அதனால் முன்கூட்டியே உங்களுடைய sponsor யிடம் கூறி விடுங்கள்.

நீங்கள் எங்கு தங்கப் போகிறீர்கள் என்பதை அவர்கள் கேட்பார்கள்.

ஹோட்டலில் தான் தங்கப் போகிறீர்கள் என்றால் அங்கு புக் செய்ததற்கான விவரங்களை கேட்பார்கள்.

5.Return ticket :

திரும்ப வருவதற்கான டிக்கெட் இருக்கிறதா என்பதை அவர்கள் கேட்பார்கள்.ஒரு மாதத்திற்காக இருந்தாலும் ,10 நாட்களுக்குள் இந்தியா திரும்புவதாக இருந்தாலும் அதற்கான ரிட்டன் டிக்கெட் கண்டிப்பாக அவர்களிடம் காட்ட வேண்டும்.இவை அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியாக பதில் அளித்து அவர்கள் கேட்கும் டாக்குமெண்ட்கள் மற்றும் விவரங்களை அளித்தாலே நீங்கள் சிங்கப்பூருக்கு செல்லலாம்.

இதில் ஏதாவது ஒன்று தவறுதலாகவோ இல்லை ,ஸ்பான்சர் உடைய id proof , மொபைல் நம்பர் இல்லை என்றாலோ , உங்கள் மேல் எதாவது சந்தேகம் இருந்தாலோ ,அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றாலோ உங்களை டீபோர்ட் செய்து விடுவார்கள்.

இது போன்ற பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள SGTAMILAN இணையப்பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.