என்னது..!! உலக மகளால் அதிகம் விரும்பப்படும் சாக்லேட் இதுதானா!!
உலகளாவிய சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான YouGov நடத்திய ஆய்வில் உலகில் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பப்படும் சாக்லேட் ஸ்விச்சர்லாந்தில் தயாரிக்கப்படுபவையே என்று தெரியவந்துள்ளது.
YouGov நடத்திய இந்த ஆய்வில் 17 நாடுகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களில் அதிகப்படியானோர் மில்க்(Milk) சாக்லேட்டையும், டார்க் சாக்லேட்டையும் அதிகம் விரும்புகின்றனர்.
இந்த ஆய்வின்படி, உலகில் எந்த நாட்டு சாக்லேட் மிகவும் பிரபலமானது என்ற கேள்விக்கு பதிலாக, கீழ்காணும் சதவிகிதங்கள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, 👉 ஸ்விச்சர்லாந்து சாக்லேட்: 39 சதவீதம் 👉 பெல்ஜியம் சாக்லேட்: 28 சதவீதம் 👉 பிரிட்டிஷ், இத்தாலிய சாக்லேட்: 13 சதவீதம்
அதைத்தொடர்ந்து சிங்கப்பூர் வாழ் மக்களின் விருப்பமான சாக்லேட்கள் சதவீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 👉 டார்க் சாக்லேட்: 44 சதவீதம் 👉 மில்க் சாக்லேட் :24 சதவீதம் 👉 ஒயிட் சாக்லேட்: 6 சதவீதம் 👉 மற்ற வகை சாக்லேட்கள்: 21சதவீதம்
மேலும் சிங்கப்பூர் மக்களின் விருப்பமாக டார்க் சாக்லேட் இருப்பதன் காரணம் என்னவென்று நடத்திய ஆய்வின் படி
மக்களுக்கு அதன் மீது இருக்கும் ஈர்ப்பு (சுவை), விலை மற்றும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களே என்றும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்த டார்க் சாக்லேட்கள் ஆரோக்கிய பலன்களை அளிப்பதாகவும் மேலும் டார்க் சாக்லேட்டில் கலந்திருக்கும் குறைந்தபட்ச சர்க்கரையின் அளவையும் கருத்தில் கொண்டு இந்த சாக்லேட்டை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.