சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை…!!!

சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டு 21 முதல் 59 வயதுடைய உள்ளூர் குடிமக்களுக்கு SG60 ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கும் பணி இன்று (22.07.25) முதல் தொடங்கியுள்ளது.

ஒவ்வொருவருக்கும் $600 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.

முந்தைய கட்டமாக, ஜூலை 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு $800 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்பட்டு வந்தது.

இதுவரை 915,000 பேருக்கும் மேற்பட்டோர் (83%) அந்த வவுச்சர்களைப் பெற்றுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் வடிவத்தில் வவுச்சர்களைப் பெற்றவர்கள்.

மேலும் இது குறித்து வர்த்தகம், தொழில், கலாச்சாரம் மற்றும் சமூகம் மற்றும் இளைஞர் துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங் கூறியதாவது,

இதுவரை $127.6 மில்லியன் மதிப்பிலான வவுச்சர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதில் $76.6 மில்லியன் ஹாக்கர் ஸ்டால்கள் மற்றும் சிறிய கடைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

$51 மில்லியன் பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய தினம் நெருங்கி வரும் நிலையில், உள்ளூர் பாரம்பரியம் மற்றும் வியாபாரங்களை ஆதரிக்க மக்களுக்கு இந்த வவுச்சர்களைப் பயன்படுத்துமாறு லோ யென் லிங் கேட்டுக்கொண்டார்.

இச்சலுகை, சிங்கப்பூரில் உள்ள 23,000க்கும் மேற்பட்ட சிறிய வியாபாரிகள் மற்றும் 400 கிளைகளுடன் இயங்கும் 8 பெரிய அங்காடிச் சங்கிலிகளுக்கு ஆதரவாக அமையும்.

முக்கிய குறிப்பு: SG60 வவுச்சர்கள் பெற, அதிகாரப்பூர்வ தளமான go.gov.sg/sg60v இல் மட்டுமே பதிவு செய்யலாம் என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan