துவாஸ் சவுத்தில் அதிர்ச்சி..! 29 வயது ஆடவர் கொலை.. 4 மணி நேரத்தில் சிக்கிய 25 வயது இளைஞர்.!

துவாஸ் சவுத்தில் அதிர்ச்சி..! 29 வயது ஆடவர் கொலை.. 4 மணி நேரத்தில் சிக்கிய 25 வயது இளைஞர்.!

சிங்கப்பூர்: துவாஸ் சவுத் பகுதியில் 29 வயது நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 25 வயது இளைஞர் மீது இன்று (ஆகஸ்ட் 31) நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு சுமார் 10:10 மணியளவில், துவா சவுத் ஸ்ட்ரீட் 15, துவா சவுத் அவென்யூ 14 -யை நோக்கிச் செல்லும் சாலையில் உதவி கோரி காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்குக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சாலையில் 29 வயது நபர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டனர். அவரை பரிசோதித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) மருத்துவ குழுவினர், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், 25 வயது இளைஞரை 4 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவரும் கைது செய்யப்பட்ட இளைஞரும் ஏற்கெனவே ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 25 வயது இளைஞர் மீது தண்டனை சட்டம் 1871-ன் பிரிவு 302(1)ன் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.

இந்த வழக்கு தொடர்பான காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிங்கப்பூர் சட்டத்தின்படி கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.