நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..??

நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..??

​தமிழக வீடுகளில் சரும பராமரிப்பு என்பது ஒரு பழக்கமாக மட்டுமல்ல, பாரம்பரியமாகவும் இருந்து வருகிறது. மஞ்சள், கடலைமாவு, தயிர், சந்தனம் போன்றவற்றை வைத்து ஃபேஷியல் செய்வது பலரின் சிறுவயது நினைவுகளோடு கலந்த ஒன்று.
​இந்த பாரம்பரிய முறைகள் சருமத்தைச் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஓரளவிற்கு உதவுகின்றன.

ஆனால் இன்றைய மாசு, மனஅழுத்தம், அதிக சூரிய வெப்பம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் உருவாகும் சரும பிரச்சினைகள் பழைய காலத்தை விட மிகவும் மாறுபட்டிருக்கின்றன. அதனால், “வீட்டு வைத்தியம் மட்டும் போதுமா?” என்ற கேள்வி இன்று முக்கியமாகிறது.

அதேபோல், ‘வெள்ளை நிற சருமம்தான் ஆரோக்கியம்’, ‘எரிச்சல் இருந்தால்தான் கிரீம் வேலை செய்கிறது’, ‘வீட்டு வைத்தியம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு’ என்பன போன்ற பல நம்பிக்கைகளும் இன்னும் மக்களிடையே இருக்கின்றன.

உண்மையில் இவை எந்த அளவிற்கு சரி? பாரம்பரிய பராமரிப்பிற்கும் நவீன சரும சிகிச்சைகளுக்கும் இடையே என்ன வித்தியாசம்? சருமத்திற்கு உண்மையில் என்ன தேவை? என்பதை கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

1. “வெள்ளை சருமம்தான் ஆரோக்கியமானது” என்பது தவறான எண்ணம்
​நம்முடைய சமூகத்தில் இன்னும் நிறம் குறித்த தவறான பார்வை இருக்கிறது. பலர் வெளிர்பட்ட சருமத்தையே ஆரோக்கியம் அல்லது அழகுடன் இணைத்துப் பார்க்கிறார்கள். ஆனால் தோல் நிபுணர்கள் கூறுவது வேறு. சருமத்தின் நிறம் முக்கியமல்ல; அது ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.


​சருமம் ஈரப்பதத்துடன் இருக்கிறதா, மென்மையாக இருக்கிறதா, அடிக்கடி அழற்சி அல்லது சேதம் ஏற்படுகிறதா என்பதுதான் உண்மையான அளவு கோல். தமிழர்களின் இயல்பான கறுமை அல்லது மஞ்சள் கலந்த சரும நிறங்களும் மிகவும் அழகானதும் ஆரோக்கியமானதும்கூட.

​2. மஞ்சள், தயிர், கடலைமாவு எல்லாவற்றிற்கும் தீர்வா?
​தமிழக வீடுகளில் மஞ்சள், தயிர், கடலைமாவு போன்றவற்றை பயன்படுத்தி ‘ஃபேஷியல் மாஸ்க்’ போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இவை சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், ஓரளவிற்கு பராமரிக்கவும் உதவலாம். ஆனால் நீண்டகால கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள், சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் போன்ற ஆழமான பிரச்சினைகளை சரிசெய்ய இவை மட்டும் போதாது.

அப்பிடிப்பட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவ ரீதியான சிகிச்சைகள் தேவைப்படும். குறிப்பாக ‘ஸ்கின் பீல்’, லேசர் சிகிச்சை, ஹைட்ரேஷன் தெரபி போன்ற நவீன சிகிச்சைகள் சருமத்தின் மேற்பரப்பை பாதுகாப்பாக புதுப்பித்து, நிறமாறுபாடுகளை குறைக்க உதவுகின்றன.

3. பியூட்டி பார்லர் ஃபேஷியல் மற்றும் மருத்துவ சிகிச்சை ஒன்றல்ல
​பலர் பார்லரில் செய்யப்படும் ஃபேஷியல் மற்றும் கிளினிக்கில் செய்யப்படும் சிகிச்சைகள் ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். ஆனால் இவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.


​பார்லர் ஃபேஷியல் பொதுவாக மேற்பரப்பைத் சுத்தம் செய்து, தற்காலிக புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால் மருத்துவத்திலுள்ள சிகிச்சைகள், சருமத்தின் அடிப்படை பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கேற்ற முறையில் செயல்படுகின்றன. அதனால் அதன் பலன்களும் நீண்டநாள் நீடிக்கும்.


​4. “எரிச்சல் இருந்தால்தான் கிரீம் வேலை செய்கிறது” என்பது தவறான நம்பிக்கை
​சிலர் பயன்படுத்தும் கிரீம் அல்லது சிகிச்சை எரிச்சல் தரும் போது, அது நல்ல பலன் தருகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் அதிக எரிச்சல் என்பது பல நேரங்களில் சருமம் பாதிக்கப்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

நல்ல சரும பராமரிப்பு என்பது சருமத்தை தேவையில்லாமல் காயப்படுத்துவது அல்ல. சரியான சிகிச்சை என்பது பாதுகாப்பாகவும், அளவான முறையிலும் செய்யப்பட வேண்டியது.

​5. ஆரம்பத்திலேயே கவனித்தால் சருமத்தை பாதுகாக்கலாம்
​சிறிய கரும்புள்ளி, ஆரம்ப நிலை முகப்பரு, உலர்ந்த சருமம் போன்றவற்றை அலட்சியப்படுத்தாமல் ஆரம்பத்திலேயே கவனித்தால், பெரிய சரும சிகிச்சைகளை தவிர்க்கலாம். சருமமும் உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே தொடர்ந்து பராமரிப்பு தேவைப்படுகின்ற ஒரு பகுதியே.

இன்றைய காலத்தில் பாரம்பரிய பராமரிப்பையும், நவீன மருத்துவ அறிவியலையும் சரியாகப் பயன்படுத்துவதுதான் சிறந்த அணுகுமுறை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பாட்டி (வீட்டு) வைத்தியம் இயற்கையான சரும பராமரிப்பை வழங்கும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ப தேவையான இடங்களில் நவீன சரும சிகிச்சைகளின் உதவியையும் பெறுவது அவசியம்.

​சரும பராமரிப்பு என்பது அழகை மாற்றுவது அல்ல; சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதே. பாரம்பரிய வழிமுறைகள் சில நேரங்களில் பலன் தரலாம். ஆனால் சருமத்தின் தேவையை புரிந்து கொண்டு, தேவையான நேரத்தில் நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்ல தீர்வாக இருக்கும்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK