இளம்பெண்களே முகப்பருவால் கவலையா..??? அப்போ இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க..!!!

இளம்பெண்களே முகப்பருவால் கவலையா..??? அப்போ இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க..!!!

பெண்களுக்கு முகப்பருக்கள் முகத்தின் அழகையே கெடுத்து விடும். அதிலும் குறிப்பாக இளம் பெண்களுக்கு முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும்.முகத்தில் ஆங்காங்கே தோன்றும் கரும் புள்ளிகள் மற்றும் முகப்பருவால் பெண்கள் வெளியில் செல்லக்கூட கூச்சப்படுவர். இந்த முகப்பருவை நாம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சரி செய்யலாம்.

முகப்பருக்களை குறைக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்:

✨️ வேப்பிலைப் பொடி, துளசிப் பொடி, புதினா பொடி ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் முல்தானி மெட்டி இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும்.

✨️ இவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருக்கள் உள்ள இடங்களில் தடவவும்.

✨️ 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவவும்.

✨️ இப்படி செய்வதால் முகப்பருக்கள் படிப்படியாக குறையும்.

✨️ இரண்டு ஸ்பூன் ஓமவல்லிச்சாருடன் ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனம் கலந்து பருக்கள் உள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

✨️ சந்தனத்தை அரைத்து பருக்கள் மீது தடவினால், பருக்களால் ஏற்படும் தழும்புகள் நீங்கும்.


✨️ அருகம்புல் பொடி மற்றும் குப்பைமேனி இலை பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அதை குளிர்ந்த நீரில் கலந்து பருக்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

✨️ பத்து ரோஜா இதழ்களை எடுத்து அதை சூடான நீரில் ஊற வைத்து பின்னர் வடிகட்டிய நீரை முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் குறையும்.

✨️ இளநீரில் சிறிது பஞ்சை நனைத்து முகத்தைத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாக குளிர்ச்சியுடன் இருக்கும்.

🔶️ தேங்காய் பால் ஃபேஷியல்

✨️ மைதா மாவு, தேங்காய் பால் தலா இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் துருவிய தேங்காய் கலந்து முகத்தில் தடவவும்.

✨️ 15 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் கைகளில் தண்ணீரை எடுத்து முகத்தில் வட்ட வடிவில் தேய்க்க இறந்த செல்கள் நீங்கும்.

✨️ பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

✨️ இப்படி செய்வதால் முகப்பருக்கள் படிப்படியாக குறையும்.


🔶️ சப்போட்டா ஃபேஷியல்

✨️ இரண்டு டீஸ்பூன் நன்றாக மசித்த சப்போட்டா பழத்தை எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

✨️ இந்தக் கலவையை உங்கள் கழுத்து, கைகள், முகம் மற்றும் நெற்றியில் தடவவும்.

✨️ பின்னர் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.