சிங்கப்பூரில் மிகப்பெரிய டெங்கு மையமாக மாறியுள்ள ஓர் பகுதி!! மற்றொரு வைரஸ் பரவும் அபாயம்!! எங்கு?

உட்லண்ட்ஸ் பகுதி நாட்டின் மிகப்பெரிய டெங்கு மையமாக மாறியுள்ளது.மேலும் இரண்டு ஜிகா வழக்குகளும் உருவாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமை முடிவடைந்த வாரத்தில் உள்ளூரில் மொத்தம் 126 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இந்த தகவல் தேசிய சுற்றுசூழல் அமைப்பின் வலைத்தளத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கு முந்தைய வாரத்தை விட இது எட்டு அதிகம் .
ஜூன் 17 (நேற்று) ஆம் தேதி நிலவரப்படி இவ்வாண்டு டெங்கு சம்பவங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2403 ஐ தொட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் 11 வது ஸ்ட்ரீட் மற்றும் 32 வது ஸ்ட்ரீட்டில் இரண்டு ஜிகா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் கொசு மற்றும் கழிவுநீர் சோதனைகளில் ஜிகா வைரஸை தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் கண்டறிந்துள்ளது.அந்த பகுதியில் ஜிகா வைரஸ் பரவக்கூடும் என்பதை இது காட்டுகிறது.
டெங்கு மற்றும் ஜிகா இரண்டும் ஏடிஸ் கொசுக்கள் மூலமாக பரவுகின்றன.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
