சிங்கப்பூர் சாலையில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி..!!

சிங்கப்பூர் சாலையில் அதிர்ச்சி சம்பவம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி..!!

சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 3) காலை டம்பென்ஸ் விரைவுச் சாலையை(TPE) நோக்கிச் செல்லும் செலேட்டர் விரைவுச் சாலையில் (SLE) 4 கார்கள் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த காணொளியானது போக்குவரத்து விபத்துக்களைப் பதிவு செய்யும் சமூக ஊடகப் பக்கமான SGRV என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த காணொளியில் மலேசிய உரிமத் தகடுகளைக் கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு சிவப்பு நிற கார் முதல் பாதையில் இருந்து திடீரென பாதை மாறி 2வது பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளது.

கார் மோதியதில் அந்த மோட்டார் சைக்கிளும் அதன் ஓட்டுநரும் 3வது பாதைக்கு தூக்கி வீசப்படுவதும் தெரிகிறது. 3வது பாதையில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு வெள்ளை நிற பிக்கப் டிரக் விரைவாகச் செயல்பட்டு திடீரென பிரேக் பிடித்துள்ளது. அதனால் மோட்டார் சைக்கிள் 2வது மோதலில் ஏற்படுவதை அது தடுத்துள்ளது.

இருப்பினும் நெருக்கமாக பின் தொடர்ந்து வந்த காரால் சரியான நேரத்தில் பிரேக் பிடிக்க முடியாத காரணத்தால் அந்த வெள்ளை பிக்கப் ட்ரக் பின்புறத்தில் மற்றொரு கார் மோதி உள்ளது.

தொடர் விபத்திறகான காரணம் தெளிவாக தெரியப்படவில்லை என்றாலும், விரைவுச் சாலையின் முதல் பாதையில் தரையில் விழுந்த கைபேசியை எடுக்க முயன்ற போது ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் திடீரென நிறுத்தியதால் அவருக்கு பின்னால் வந்த பல கார்கள் திடீரென பிரேக் பிடித்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த சிவப்பு நிற கார் திடீரென தனது பாதையை மாற்றியதால் கூட இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்துக் குறித்த தகவலானது நேற்று (ஜூன் 3) காலை சுமார் 9.35 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF)தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த SCDF படையினர் விபத்தில் காயமடைந்த இருவரை சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனை மற்றும் செங்காங் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்று 54 வயதான கார் ஓட்டுநரும் சுயநினைவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. மேலும் 40 வயதுடைய கார் ஓட்டுநர் ஒருவர் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK