ஜூரோங் கிழக்கு உணவகத்தில் பரபரப்பு..!!தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.!!

ஜூரோங் கிழக்கு உணவகத்தில் பரபரப்பு..!!தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.!!

சிங்கப்பூர் சுங்கத்துறையினர் மே 12ஆம் தேதி அன்று நடத்திய அமலாக்க நடவடிக்கையின் போது ஜீரோங் ஈஸ்ட் அவென்யூ 1-ல் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்சாதன பெட்டியில் இருந்து 740 மேற்பட்ட கடத்தல் சிகரெட்டை பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் இன்று (ஜூன் 4) சிங்கப்பூர் சுங்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உணவகத்தில் ஊழியர்களாக பணிபுரியும் 4 நபர்கள் இதில் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் சுங்கத்துறை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 43 வயதிற்கும் 47 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 2 நபர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு 66 நாட்கள் மட்டும் 18 நாட்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு செய்யப்பட்ட சிகரெட்டுகளைப் பதுக்கி வைக்கத் தங்கள் வளாகங்களும் வசதிகளும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அவற்றை தவறாமல் கடையின் முதலாளிகள் ஆய்வு செய்வது அவர்களது பொறுப்பு என்று சுங்கத்துறை உச்சரித்துள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பது தெரிந்தவர்கள், https://go.gov.sg/reportcustomoffence என்ற இணையதளம் மூலம் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK