புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..??

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..??

தென் கொரியாவின் தலைநகரான சோலில் புறாக்களுக்கு உணவளிப்பதைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சோலில் உள்ள முக்கிய பகுதிகளிலும், பூங்காக்களிலும் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

புறாக்களுக்கு உணவளிக்க ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதிகளில் ஜூன் மாதம் முதல் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சோல் பெருநகர அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் புறாக்களுக்கு உணவளிப்பதற்கு 38 இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. சோல் பிளாசா, குவாங்வாமுன் சதுக்கம், சோல் ஃபாரஸ்ட் மற்றும் ஹாங்காங் பூங்காவில் உள்ள 11 பகுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

3 மாதங்களுக்கு அங்கு நேரடி வழிகாட்டுதல் நடவடிக்கைகளுக்கு விழிப்புணர்வு இயக்கங்களும் நடத்தப்பட்டன. அதையெடுத்து கடந்த ஆண்டு (2025) ஜூலை 1ஆம் தேதியிலிருந்து புறாக்களுக்கு உணவளிப்போருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தன.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முதல் முறை புறாக்களுக்கு உணவளிப்பவர்களுக்கு 2,00,000 வான் வரை அபராதம் விதிக்கப்படும். 2வது முறையாக இருந்தால் 5,00,000 வான் அபராதமும் 3வது முறையாக இருந்தால் 1 மில்லியன் வான் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


மலைகளிலும் இயற்கை வாழ்விடங்களிலும் வசிக்கும் காட்டு புறாக்கள் எளிதில் உணவு கிடைப்பதால் நகரங்களில் தற்போது வாழ தொடங்கியுள்ளனர். குடியிருப்பாளர்களும் சுற்றுப்பயணிகளும் அவற்றுக்கு உணவளிப்பதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன் விளைவாக புறா எச்சங்கள், தூய்மைகேடு உள்ளிட்ட புகார்களும் அதிகரித்து வருகின்றன.

காட்டு விலங்குகளுக்கு உணவளிக்காமல் இருப்பது, உணவுக் கழிவுகளைச் சரிவரப் பராமரிப்பது ஆகியவை மூலம் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுப்புறத்தை உருவாக்க முடியும் என்று சோல் பெருநகர் அரசாங்கத்தின் இயற்கை சூழலியல் பிரிவு தலைவர் லீ சாங் ஹூன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK