சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா?

சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா?

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் மத்தியில் எழும் பொதுவான கேள்விகளில் ஒன்றுதான் இந்த PCM பெர்மிட் பற்றிய சந்தேகம். ‘PCM பெர்மிட் பாதுகாப்பானதா? இதில் நிரந்தர வேலை கிடைக்குமா?’ என்ற கேள்விக்கான தெளிவான விளக்கத்தை இங்கு பார்ப்போம்.

PCM பெர்மிட் பாதுகாப்பானதா?
சிங்கப்பூரில் உள்ள PCM (Process Construction and Maintenance) பெர்மிட் என்பது, கப்பல் துறை (Shipyard) பெர்மிட்டை விட மிகவும் சிறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு பெர்மிட் ஆகும். எனவே, பாதுகாப்பு விஷயத்தில் நீங்கள் எந்தவித பயமும் கொள்ளத் தேவையில்லை.

இதில் நிரந்தர வேலை சாத்தியமா?
இது பாதுகாப்பான பெர்மிட் என்றாலும், இதில் தொடர்ச்சியாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேலை இருக்குமா என்று கேட்டால், அது ஒரு கேள்விக்குறிதான். அதற்குப் பின்வரும் காரணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்:

பெர்மிட் காலம்: பொதுவாக உங்களுக்கு 1 வருடம் அல்லது 2 ஆண்டுகளுக்கான பெர்மிட் வழங்கப்படும்.


வேலைத்திறன் (Performance): இந்த 2 வருடங்களில் உங்களது வேலைத்திறன் சிறப்பாக இருந்தால் மட்டுமே நிறுவனம் உங்களது பெர்மிட்டைப் புதுப்பிக்கும் (Renew).

நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திற்குத் தொடர்ந்து வேலைகள் (Projects) இருந்தால் மட்டுமே அவர்களால் உங்களது பெர்மிட்டைப் புதுப்பிக்க முடியும்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை எந்தவொரு வேலை பெர்மிட்டையுமே ‘நிரந்தரம்’ என்று சொல்ல முடியாது. இந்த ஆண்டு சிறப்பாகச் செயல்படும் நிறுவனம் அடுத்த ஆண்டு இல்லாமல் போகலாம், அல்லது அடுத்த கட்டத்திற்கு வளரலாம்.

சிங்கப்பூரில் நீண்ட காலம் நல்ல சம்பளத்துடன் பணியாற்ற, உங்களையே நீங்கள் தகுதிப்படுத்திக் கொள்வது அவசியம்:

சுய மேம்பாடு (Self-Development): சிங்கப்பூர் சென்றவுடன் அங்கேயே நின்றுவிடாமல், உங்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும்.

கோர்ஸ்கள் படிக்க வேண்டும்: அங்கு வேலை செய்து கொண்டே உங்களது துறை சார்ந்த கூடுதல் கோர்ஸ்களைப் படித்துத் சான்றிதழ்கள் பெறுங்கள்.

ஓட்டுநர் உரிமம் (Driving License): சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது உங்களது வேலை வாய்ப்புகளைப் பன்மடங்கு உயர்த்தும்.

பொது ஊழியராகவே இருந்துவிடாதீர்கள்: நீங்கள் சேர்ந்த நிறுவனத்தில் கடைசி வரை பொது ஊழியராகவே (General Worker) இருந்தால், உங்களது சம்பளமும் உயராது, உங்களது நிலையும் மாறாது. அடுத்தடுத்த தகுதிகளை வளர்த்துக் கொண்டு, அதிக சம்பளம் தரும் நிறுவனங்களுக்கு மாறிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் திறமையானவராக மாறினால், நல்ல சம்பளத்துடன் உங்களுக்காக நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கும்.

PCM வேலைவாய்ப்புகளை எப்படிப் பெறுவது?
பாதுகாப்பாகவும், குறைந்த செலவிலும் சிங்கப்பூர் PCM வேலைவாய்ப்புகளைப் பெற எளிய வழி: www.sgtamilan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

இதில் தமிழ்நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் (RA License Holders) வேலைவாய்ப்புப் பதிவுகள் அனைத்தும் இடம்பெறும். இதில் ஏராளமான PCM பெர்மிட் வேலைவாய்ப்புகளும் உள்ளன. அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்கள் என்பதால், மிகக் குறைந்த செலவிலும், முழுப் பாதுகாப்போடும் நீங்கள் சிங்கப்பூர் செல்ல முடியும்.