மறுநாள் அவரது நண்பர் மூலம் பேருந்தில் இருந்த அவரது உடைமைகளை அவர் மீட்டு உள்ளார்.
இரவு 11 மணிக்கு கிளம்ப வேண்டிய பேருந்து கடைசி நேரத்தில் 10 மணிக்கு மாற்றப்பட்டதாக கூறிய அவரை அவசரமாக வரவழைத்ததாகவும், மேலும் பேருந்துக்குள் கரையான்கள், கரப்பான் பூச்சிகள் இருந்ததாகவும் அதன் சுகாதாரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.
தமக்கு நேர்ந்த இந்த மோசமான அனுபவத்தையும், மன உளைச்சலையும் தனது Instagram பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.