சிங்கப்பூர் சைனா டவுனில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்..!! காரணம் என்ன?
சிங்கப்பூர்: சைனா டவுனில் நீல் சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு கருப்பு நிற செடான் காரின் எஞ்சினில் இருந்து அறியப்படாத காரணங்களால் புகை வரத் தொடங்கியது. அதனால் அந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்தது.
நேற்று முன்தினம் (ஜூலை 15) இரவு சுமார் 9 மணி அளவில் Xiaohongshu -வில் பயனர் ஒருவர் இச்சம்பவம் குறித்த காணொளி ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த காணொளியில் சைனா டவுன் அருகே நீல் சாலையில் ஒரு கருப்பு நிற செடான் காரின் முன் பக்கத்தில் இருந்து அடர்த்தியான கருப்பு புகை வெளியேறுவது தெரிகிறது.
ஏராளமான காவல்துறை அதிகாரிகளும் தீயணைப்பு வீரர்களும் அந்த இடத்தில் இருந்தனர். மேலும் பல காவல்துறை வாகனங்களும் தீயணைப்பு வண்டிகளும் அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்தன.
பல தீயணைப்பு வீரர்கள் காரின் முன்பக்க மூடிக்குள் குழாய்களைச் செறுகி, தீயை அணைத்து குளிர்விப்பதற்காக உள்ளே தண்ணீரை ஊற்றுவது போலவும் அந்த காணொளியில் காட்டப்பட்டது.
அந்தப் பதிவில் அந்த பயனர் அவ்விடம் முழுவதும் புகை சூழ்ந்து இருப்பதாகவும் எரியும் வாசனை வீசியதாகவும் பதிவிட்டு இருந்தார்.