NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!!

NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!!

சிங்கப்பூர் தணிக்கைக் துறைத் தலைவர் (AGO) வெளியிட்டுள்ள 2025-2026 நிதியாண்டுக்கான அறிக்கையில், சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் அதன் கீழ் செயல்படும் MOH ஹோல்டிங்ஸ்(MOHH) நிறுவனம் நிர்வகித்த தேசிய புற்றுநோய் மைய (NCCS) புதிய கட்டடக் கட்டுமானத் திட்டத்தில் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் முறையற்ற விலை நிர்ணய விதிமீறல்கள் இருப்பதுகண்டறியப்பட்டுள்ளது.

ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் ஹெமோ MOHH நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

கட்டுமான ஒப்பந்தத்தில் முதலில் குறிப்பிடப்படாத, புதிதாக சேர்க்கப்படும் கூடுதல் சேவைகளுக்கான (star rate items) விலைகளை ஆலோசர்கள் முறையாக மதிப்பீடு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விலைப் புள்ளிகளில் (Quotations) முறைகேடுகள் மற்றும் ஆவண மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கட்டுமான மாற்றங்களுக்கான முறையான ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னரே, பல கூடுதல் பணிகள் தொடங்கப்பட்டதாகவோ அல்லது முடிக்கப்பட்டதாகவோ தணிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறைந்த டெண்டர் விலைகள் காரணமாக திட்டத்தில் கிடைத்த S$147.96 மில்லியன் நிதிச் சேமிப்பபை, நிதி அமைச்சகத்திடம் (MOF) 7 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதார அமைச்சகம் அறிவிக்கவில்லை.

மேலும் அதில் $11.95 மில்லியன் உரிய அனுமதியின்றி இதர திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளது.

இந்த தணிக்கை அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே சுகாதார அமைச்சகம் தனது விளக்கத்தையும் திருத்த நடவடிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் ஒப்பந்ததாரர்கள் சமர்ப்பிக்கும் விலைப் புள்ளிகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படும்.

அனைத்து நிலையான செயல்பாடு நடைமுறைகளும் மற்றும் ஒப்பந்த மாற்றங்களும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய முறையான கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படும்.

இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உள்நாட்டுத் தணிக்கையின் வரம்பும், ஊழியர்களுக்கான கொள்முதல் மற்றும் ஒப்பந்த மேலாண்மைப் பயிற்சிகளும் அதிகரிக்கப்படும்.

இருப்பினும் இந்த திட்டப் பணிகள் அனைத்தும் பொதுமக்களின் அவசர புற்றுநோய் சிகிச்சைத் தேவையை விரைந்து பூர்த்தி செய்வதற்காக நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் தங்களுக்கு தெரிந்த முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளது.