சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது!

சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது!

சிங்கப்பூரில் இருக்கும் இன்னும் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் சிங்கப்பூரில் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் நிச்சயமாக வருமான வரி கட்டியே ஆக வேண்டும்.

இது இன்னும் பலருக்கு தெரியவில்லை. ஒரு சிலர் அவர்களுடைய வருமான வரியை முறையாக செலுத்தாமல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்து விடுவதால் அவர்கள் திரும்ப சிங்கப்பூர் செல்வதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.

நீங்கள் சிங்கப்பூரில் சம்பாதிக்கும் பணத்திற்கு ஆண்டுதோறும் வருமான வரி செலுத்தி ஆக வேண்டும்.

ஆனால் இதில் சில விதிவிலக்கும் உண்டு. உங்களுடைய ஆண்டு வருமானம் குறைவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் விசாவில் உள்ள சம்பளத்திற்கு தான் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும். தற்பொழுது சிங்கப்பூரில் ஒரு சிலர் இ பாசில் (E PASS) சென்று வேலை செய்து வருகிறார்கள்.

அவர்களுடைய விசாவில் சம்பளம் அதிகமாக போட்டிருக்கும். ஆனால் அவர்கள் கையில் வாங்கும் தொகை மிகவும் குறைவாக இருக்கும். இதற்கு அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.

ஆனால் அப்படி கிடையாது; நீங்கள் உங்களுடைய விசாவில் போட்டிருக்கும் சம்பளத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை வருமானவரி செலுத்தியே ஆக வேண்டும்.

உங்களுக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் இருந்தாலும் கூட அதை நீங்கள் இதில் காமித்து உங்களுடைய வரியை குறைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் வருடம் 20000 சிங்கப்பூர் டாலருக்கு அதிகமாக சம்பாதிக்கிறீர்கள் என்றால் உடனடியாக உங்களுடைய மனைவி மற்றும் குழந்தையின் பெயரை வருமானவரி துறையில் பதிவு செய்து வரி விலக்கை பெற்றுக் கொள்ளுங்கள்.

இது சம்பந்தமாக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
Usha: 8754396756
Laxmi : 81247 38010
Madhu : 7550207508 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK