உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து - கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..!
சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் அவென்யூ 2 இல் SMRT பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் லூப் ரோடு மற்றும் உட்லண்ட்ஸ் 64 டிரைவ் சந்திப்பில், நேற்று (ஜூலை 15) காலை சுமார் 8:00 மணி அளவில் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் காயம் அடைந்த 58 வயதான கார் ஓட்டுநர், 45 வயதான பெண் ஓட்டுநர் மற்றும் 3 பயணிகள் உட்பட 5 பேரும் சுயநினைவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் 25 வயது 58 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.