சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுத்தம்: எப்போது..?? காரணம் என்ன..??

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுத்தம்: எப்போது..?? காரணம் என்ன..??

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது மத்திய கிழக்கில் நிலவுகின்ற பதட்ட நிலை காரணமாக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் – துபாய் மற்றும் துபாய் – சிங்கப்பூர் வழித்தட விமான சேவைகளை அக்டோபர் இறுதிவரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட விமானங்களில் பயணிப்பதற்காக முன் பதிவு செய்திருந்த பயணிகளை மாற்றி விமானங்களில் அனுப்புவதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.

பயணிகள் தங்களது பயணத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கு அல்லது கட்டணங்களை திரும்ப பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் நேரடி அறிவிப்புகளை தெரிந்து கொள்ள பயணிகள் தங்களுடைய விமான நிலையை singapore airlines Flight Status கொஞ்சம் பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவெடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.