பொதுப் பாதைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தீவிர அமலாக்க நடவடிக்கையை LTA மேற்கொண்டது.
உந்து சக்தி கொண்ட மின்-ஸ்கூட்டர்கள் (e-Scooters) மற்றும் மின்-மிதிவண்டிகளில் (e-bikes) சட்டவிரோத மாற்றங்களைச் செய்தல், பதிவு செய்யப்படாத சாதனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் முறையற்ற அல்லது தெளிவற்ற பதிவு எண்களைக் காட்சிப்படுத்துதல் போன்றவை கண்டறியப்பட்டன.
தீவிர நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பான பயணத்தை ஊக்குவிக்க, நிகழ்நேர வேகக் கட்டுப்பாட்டு பலகைகளை LTA நிறுவனம் தற்போது அமைத்து வருகிறது.
இந்த டிஜிட்டல் பலகைகள் மூலம், பயணிகள் தங்களின் தற்போதைய வேகத்தை அறிந்து கொண்டு, அங்குள்ள LTA- இன் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களில் சிக்குவதற்கு முன்பாகவே வேகத்தைக் குறைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முறையான TA இறக்குமதி அனுமதியின்றி விதிமுறைகளுக்கு புறம்பான தனிநபர் பயண சாதனத்தை இறக்குமதி செய்ததற்காக, ‘Shiplah! Technologies Pte Ltd’ என்ற நிறுவனத்திற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் $1500 அபராதம் வைத்துள்ளது.
பொதுப் பாதைகளை நடப்பவர்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பானதாக மாற்ற, விதிமீறும் ஓட்டுநர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என LTA எச்சரித்துள்ளது.