இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..?

இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..?

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா வெளியிட்ட 4 நாடுகளுக்கு கடப்பிதழ்(Passport), விசா (Visa) போன்ற இந்திய தூதரக சேவைகள் வழங்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க இந்திய அரசாங்கம் நடத்திய ஏலக் குத்தகையை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஏலக்குத்தகை நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்று ஏலத்தில் தோல்வி அடைந்த இரு நிறுவனங்கள் கொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அபுதாபி, குவைத் ஆகிய நாடுகளுக்கும் தூதரகச் சேவைகளை வழங்குவதற்கான ஏலக் குத்தகைதான் அது.

ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டன, சில நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டன என்பன போன்ற சந்தேகங்களை அதிகாரிகள் போதுமான அளவு தெளிவுபடுத்தவில்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

 

எனவே 4 நாடுகளுக்கான தூதரகச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க புதிய ஏலக்குத்தகையை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது சேவைகள் வழங்கப்படுவதில் எந்த இடையூறும் ஏற்படாமலும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமலும் இருப்பதை உறுதி செய்ய தற்போதுள்ள நிறுவனங்கள் தொடர்ந்து தூதராகச் சேவைகள் வழங்க அனுமதிக்கப்படலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

இந்திய நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பால் சிங்கப்பூரில் கடப்பதிழ், விசா போன்ற சேவைகள் பாதிக்கப்படவில்லை என சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் தற்போது தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இந்தியத் தூதரகம் சார்பில் தூதரகச் சேவைகளுக்கான விண்ணப்பங்களைப் பெற 2 இந்தியத் தூதரக விண்ணப்ப மையங்கள் உள்ளன . அந்த ஏற்பாட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தூதரகம் விளக்கியுள்ளது.

ஆயினும், ஆஸ்திரேலியாவின் இந்தியத் தூதரக சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளன. அந்த சேவைகளை வழங்கி வந்த விஎஃப்எஸ் குளோபல் நிறுவனம் ஜூலை 1 முதல் கடப்பிதழ் மற்றும் விசா சேவைகளுக்கு புதிய விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கேன்பெராவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உத்தரவுகளை அதற்குக் காரணங்களாக அது குறிப்பிட்டுள்ளது.