சிங்கப்பூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குழுவைத் தட்டி தூக்கிய சிங்கப்பூர், தாய்லாந்து காவல்துறை!! கைப்பற்றிய பணம் எவ்வளவு என்று தெரியுமா?

அண்மையில் சிங்கப்பூர் காவல்துறையும், தாய்லாந்து காவல்துறையும் ஒரு கூட்டு நடவடிக்கையை நடத்தியது. சிங்கப்பூரில் விபச்சாரத்தில் ஈடுபட வெளிநாட்டுப் பெண்களை வேலைக்கு அமர்த்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு நாடுகடந்த குற்றக் குழுவை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஜூன் 17ஆம் தேதி தாய்லாந்தின் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 38 மற்றும் 36 வயதுடைய இரண்டு சிங்கப்பூரைச் சேர்ந்த நபரும்,50 வயதுடைய தாய்லாந்தைச் சேர்ந்த நபரும் அடங்குவர்.
2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாரணையில் , விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குறைந்தது 76 பெண்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்தது.
தீவிர விசாரணைக்கு பிறகு குற்றவியல் குழுவின் முக்கிய ஆதாரங்களைப் பெறவும் மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காணவும் சிங்கப்பூர் காவல்துறை தாய்லாந்து காவல்துறையின் தொழில்நுட்ப குற்றத்து துறையுடன் நெருக்கமாக பணியாற்றியது.
அவர்களில் ஒருவரான 38 வயதுடைய சிங்கப்பூரர் விபச்சாரத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை வங்கிக் கணக்கின் மூலம் தாய்லாந்திற்கு அனுப்பியுள்ளார். தாய்லாந்து காவல்துறை சுமார் $790000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றியது.
இதில் பணம் மற்றும் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் மடிக்கணினிகள் மற்றும் கைத்தொலைபேசிகளும் அடங்கும்.
சிங்கப்பூர் காவல்துறை அந்த நபரின் உள்ளூர் வங்கி கணக்குகளில் இருந்து $1.26 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூர் டாலர்களை முடக்கியது . விசாரணை தொடர்கிறது.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
