சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் சிங்கப்பூருக்கு 150 மில்லியன் வருமானம்!! அது என்ன நிகழ்ச்சி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் சிங்கப்பூருக்கு 150 மில்லியன் வருமானம்!! அது என்ன நிகழ்ச்சி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் சிங்கப்பூருக்கு 150 மில்லியன் வருமானம்!! அது என்ன நிகழ்ச்சி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

அனைத்துலக அளவில் பிரபலமான கலைஞர் லேடி காகா இவர் கடந்த மே மாதம் சிங்கப்பூரில் தேசிய விளையாட்டு அரங்கில் தனது பிரத்தியேக கலை நிகழ்ச்சியை நடத்தினார்.

இதன் மூலமாக சிங்கப்பூரின் பயணத்துறைக்கு 100-ல் இருந்து 150 மில்லியன் வருமானம் ஈட்டி தந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற டெய்லர்ஸ் ஸ்விஃப்ட், கோல்ட்பிளே கலை நிகழ்ச்சியால் 350 இலிருந்து 500 மில்லியன் வரை வருமானம் ஈட்டியது சிங்கப்பூர் பயணத்துறை.

லேடி காகாவின் நிகழ்ச்சி அதைவிட குறைந்த வருவாயை ஈட்டி இருந்தாலுமே ஆசியாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்த சிங்கப்பூர் தொடர்ந்து பிரபல தளமாக இருந்து வருவதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

பில்போர்ட் எனும் அமெரிக்க இசை பொழுதுபோக்கு வெளியீடு சிங்கப்பூரில் நடைபெற்ற லேடி காக்கா கலை நிகழ்ச்சிகளுக்கு விற்பனையான நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை 1,93,000 என்றும் ஏறக்குறைய 40.8 மில்லியன் டாலர் பெறப்பட்டதாகவும் கூறியது.

அதன் மாதாந்திர அறிக்கையில் சிங்கப்பூரின் தேசிய விளையாட்டு அரங்கில் மே 18, 19 ,21 ,24 ஆகிய நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு நாள் இரவும் ஏறக்குறைய 13 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்ததாக தெரிவித்தது.

சிங்கப்பூரில் தேசிய விளையாட்டரங்கில் ஏறக்குறைய 50,000 பேர் வரை அமர முடியும்.

கலை நிகழ்ச்சி இடம்பெறும் காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருவது தங்குவது, உணவு,பானம் பொருட்கள் வாங்குவது போன்றவை அதிகரிக்கும். எனவே சிங்கப்பூரின் வருமானமும் அதிகரிக்கும். கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற காலகட்டத்தில் சிங்கப்பூருக்கு படையெடுத்த அனைத்து உலக பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

இவ்வாண்டு மே மாத வருகையாளர்களின் எண்ணிக்கை 8% அதிகரித்ததாக சிங்கப்பூர் பயணத்துறை கழகம் தெரிவித்தது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan