பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் 37 வயது நபர் கைது...!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஸ்டேடியம் பிளேஸ் பகுதியில் காவல்துறையின் அடையாளப் பலகையை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக 37 வயது நபர் மீது இன்று(03.01.26) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி மாலை 4:10 மணியளவில்,மரைன் பரேட் சுற்றுப்புற காவல் நிலையத்திற்குச் சொந்தமான குற்ற எச்சரிக்கை பலகை சேதப்படுத்தப்பட்டதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது.
இன்று (03.01.26)அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக S$2,000 வரை அபராதம்,மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் மூன்று முதல் எட்டு வரை பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கடுமையான குற்றம் என்றும், சட்டத்தை வெளிப்படையாகப் புறக்கணிக்கும் செயல்களை காவல்துறை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும் போலீசார் மீண்டும் வலியுறுத்தினர்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.