மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..??

மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..??

மலேசியா: மலேசியாவில் ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக சீன நாட்டினரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரிங்கிட் (S$58,000) அளவிலான குறியீட்டு நாணயத்தை மிரட்டி பறித்ததாக 12 மலேசிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் மலேசிய காவல் படையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் ஒருவராக உதவி காவல் ஆணையர் பதவியில் உள்ள அதிகாரியும் அடங்குகிறார்.

சிலாங்கூர் மாநிலத்தின் காஜாங்கில் உள்ள அமைந்துள்ள கிரீன் ஹில்ஸ் பகுதியிலுள்ள ஒரு மாளிகையில் இந்த மாதம் 5ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு மோசடி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் எந்தக் குற்றத்திற்கும் உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிகாரிகள் 4 இலட்சம் ரிங்கிட் (S$116,000) ஒப்படைக்காவிட்டால் கைது செய்வதாக மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இறுதியில், சுமார் 50,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள குறியீட்டு நாணயம் (S$63340)மாற்றிய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

எட்டு சீன நாட்டினர்கள் கொண்ட குழு, தாங்கள் ஒரு சீன நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட சந்தை ஆய்வு பணியாளர்கள் என தெரிவித்துள்ளனர். மலேசியாவில் வணிக வாய்ப்புகளை ஆய்வு செய்ய வந்திருந்ததாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் தங்கள் வாடிக்கையாளர் கடும் அச்சத்திற்குள்ளானதாக அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK