தனிநபர் நடமாட்டச் சாதன (PMD) விபத்துகள் குறித்த அப்டேட்..!!
கடந்த இரண்டு ஆண்டுகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் ஏற்பட்ட விபத்துகள் குறித்து போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெப்ரி சியோ தரவுகளை வழங்கினார். கடந்த ஈராண்டுகளில் மொத்தம் 710 விபத்துகள் பதிவாகியுள்ளன.
65 வயதிற்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட விபத்துகள்: 181. 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள்: 24. இந்த விபத்துகளில் 10 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது கவலைக்குரிய விஷயமாகும்.