ஆசியக் கோப்பை - 2027 கால்பந்து போட்டி : சிங்கப்பூர் வெற்றி..!!
ஆசியக் கோப்பை 2027 கால்பந்து போட்டிக்கான இறுதி தகுதிச் சுற்றானது நேற்று (மார்ச் 31) இரவு 8 மணி அளவில் சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த இறுதி தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதியது. போட்டியின் இறுதியில் பங்களாதேஷை வீழ்த்தி சிங்கப்பூர் அணியானது 1 – 0 என்ற அளவில் அபார வெற்றி அடைந்துள்ளது.
ஆட்டம் தொடங்கி 32 வது நிமிடத்தில் சிங்கப்பூர் அணி தனது முதல் கோலை அடித்தது. ஹாரிஸ் ஸ்டீவார்ட் (Harhys Stewart) தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினர்.
சிங்கப்பூர் அணியை எதிர்த்து பங்களாதேஷ் வீரர்களும் கடுமையான சவால்களை கொடுத்தனர். இருப்பினும் பங்களாதேஷ் வீரர்கள் அவர்களது சில வாய்ப்புகளை தவறவிட்டனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பும், இடைவெளிகளின் போதும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
2027-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை உலக போட்டியில் சிங்கப்பூர் அணியானது ஏற்கனவே தகுதி பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியானது சிங்கப்பூர் அணிக்கு சிறந்த பயிற்சியாக அமைந்தது.