AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!
செயற்கை நுண்ணறிவு (AI) இன்று ஒரு புதிய தொழில்நுட்பமாக மட்டுமல்ல எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான முக்கிய திறனாக மாறியுள்ளது.
கல்வி, மருத்துவம், விவசாயம், ஊடகம், தொழில் முனைவு என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.ஐ. திறன் கொண்டவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்திய இளைஞர்களை உலக தரத்தில் ஏ ஐ திறன் பெற்றவர்களாக உருவாக்கும் நோக்கத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை(MIB), இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனம்(IICT), GOOGLE மற்றும் YOUTUBE இணைந்து தேசிய அளவிலான இலவச ஏஐ திறன் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
யார்? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? மாணவர்கள், பட்டதாரிகள், யூடியூபர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள்(content creators), டிஜிட்டல் ஊடகத்துறையினர், தொழில் முனைவோர் மற்றும் ஏ.ஐ. கற்க விரும்பும் அனைத்து இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம்.
என்ன கற்றுத் தரப்படும்? முதல் கட்டத்தில் சுமார் 33 மணி நேர ஆன்லைன் பயிற்சியில் ஏஐ அடிப்படைகள், Prompt இன்ஜினியரிங், ஜெனரேட்டிவ் ஏ ஐ, google கிளவுட் ஏ ஐ, ஏஐ கருவிகளை திறமையாக பயன்படுத்தும் முறைகள் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் தொழில் நுட்பங்கள் கற்பிக்கப்படும்.
இரண்டாம் கட்டத்தில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஜெமினி, google ஏ ஐ ஸ்டுடியோ, வெர்டெக்ஸ் ஏ ஐ, வியோ மூலம் ஏ ஐ வீடியோ உருவாக்குதல், youtube கிரியேட்டர் திறன்கள், ஏ ஐ ஸ்டோரி டெல்லிங் உள்ளிட்ட மேம்பட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
எதிர்கால கட்டிடங்கள் அனைத்தும் சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கும் கூலிங் ரூப் தொழில்நுட்பத்துடனும் மின்சார ஏசிகள் இல்லாமல் இயற்கை காற்று உள்ளே வரும் காற்றோட்ட வசதியுடனும் கட்டப்பட வேண்டும்.
மொத்தத்தில் நகரங்களை வெறும் கான்கிரீட் காடுகளாக மாற்றாமல் இயற்கையோடு இணைந்த பசுமை நகரங்களாக மாற்றுவது மட்டுமே வரும் காலங்களில் மனித உயிர்களை காப்பாற்றுவதற்கான ஒரே வழி என ஆக்ஸ்போர்டு ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் மிகவும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
சான்றிதழ் வழங்கப்படுமா? பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு google youtube மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மற்றும் IICT இணைந்து வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவு முயற்சிகளுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும்.
இந்த பயிற்சியின் முக்கியத்துவம் என்ன? இன்றைய போட்டி உலகில் பட்டம் மட்டும் போதாது புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதில் வெற்றிக்கான அடையாளம். குறிப்பாக ஏ ஐ திறன் பெற்றவர்களுக்கு எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதால், இந்த இலவச பயிற்சி ஒவ்வொரு இளைஞரும் தவறவிட கூடாத அறிய வாய்ப்பாக கருதப்படுகிறது.