உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..??

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..??

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட உலகளாவிய ஆய்வில், உலகின் 205 முக்கிய நகரங்களின் வெப்ப அபாய நிலை மதிப்பிடப்பட்டது.

அந்த ஆய்வில், இந்தியாவின் 14 நகரங்கள் உலகின் அதிக வெப்ப அபாயம் கொண்ட முதல் 50 நகரங்களில் இடம்பெற்றுள்ளன. இதில் மதுரை 7-வது இடத்திலும், சென்னை 50-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன.

இந்த ஆய்வு வெப்பநிலை மட்டுமல்லாமல், மக்களின் பாதிப்புக்குள்ளாகும் தன்மை, நகரத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வெப்பத்தை சமாளிக்கும் திறன் போன்ற காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு தரவரிசை வெளியிட்டுள்ளது.

பரப்புகளை அதிகரித்தல் மற்றும் வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வருங்கால நிலை மற்றும் தீர்வுகள் என்ன?
கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் பட்டியலை வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வருங்காலத்தில் நிலைமையையும் அதற்கான தீர்வையும் இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

புவி வெப்பமயமாதல் தற்போதைய வேகத்திலேயே நீடித்தால் வரும் காலத்தில் கோடை கால வெப்ப அலைகளின் தீவிரம் மற்றும் நாட்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

சென்னை போன்ற கடலோர நகரங்களில் வெறும் வெப்பநிலை மட்டுமல்லாமல் காற்றில் உள்ள ஈரப்பதமும் சேர்ந்து அதிகரிக்கும் இதனால் மனித உடல் வியர்வையை வெளியேற்றி தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ளும் திறனை இழக்கும். இது வெட் பல்ப் வெப்பநிலை எனப்படுமா பயனிலையை நோக்கி நகர்ந்து மனிதர்கள் வாழ முடியாத சூழலை உருவாக்கலாம்.

கடுமையான வெப்பத்தால் திறந்த விலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் கடுமையாக பாதிக்கப்படும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியில் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்.

கான்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவை திட்டமிட்டு பெரிய பூங்காக்கள் மற்றும் அடர்ந்த மரங்களை கொண்ட பசுமை பகுதிகளை உருவாக்க வேண்டும். இது நகர்ப்புற வெப்பத்தீவு விளைவை உடைத்து சுற்றுப்புற வெப்பநிலையை 2 ட செல்சியஸ் முதல் 4 செல்சியஸ் வரை இயல்பாக குறைக்கும்.

எதிர்கால கட்டிடங்கள் அனைத்தும் சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கும் கூலிங் ரூப் தொழில்நுட்பத்துடனும் மின்சார ஏசிகள் இல்லாமல் இயற்கை காற்று உள்ளே வரும் காற்றோட்ட வசதியுடனும் கட்டப்பட வேண்டும்.

மொத்தத்தில் நகரங்களை வெறும் கான்கிரீட் காடுகளாக மாற்றாமல் இயற்கையோடு இணைந்த பசுமை நகரங்களாக மாற்றுவது மட்டுமே வரும் காலங்களில் மனித உயிர்களை காப்பாற்றுவதற்கான ஒரே வழி என ஆக்ஸ்போர்டு ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் மிகவும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.