முதுமையை தள்ளிப்போடும் ரகசியம்..!! ஆய்வில் கூறியது என்ன..??

முதுமையை தள்ளிப்போடும் ரகசியம்..!! ஆய்வில் கூறியது என்ன..??

வயதாவதை தாமதப்படுத்தி இளமையை நீட்டிக்க உதவும் மருந்துகளை கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் சைலோ செபின் என்ற ஒரு வகை வேதிப்பொருளை கொண்ட காளானில் இருந்து இதற்கான மருந்துகளை பெற முடியும் என்று ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 

இந்த வகை காளான்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாகவே வளர்கின்றன. 200க்கும் மேற்பட்ட காளான் இனங்களில் இந்த வேதிப்பொருள் காணப்படுகிறது. மாடு, எருமை போன்ற கால்நடைகளின் சாணம் மற்றும் ஈரப்பதம் அதிகம் உள்ள புல்வெளிகள் காடுகளில் மரக்கட்டைகள் மற்றும் குப்பைகள் மீது மழைக்காலங்களில் இந்த காளான்கள் முளைக்கின்றன.

ஆய்வு செய்தபோது அவற்றில் மனநிலையை மாற்றக்கூடிய இயற்கை வேதிப்பொருளான சைலோசபின் இருப்பது தெரியவந்தது. இது மூளை நரம்பு செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்த உடலில் ஏற்படும் அலர்ஜியை குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நுண்ணிய ஆய்வு செய்தபோது மனித உடல் செல்கள் முதுமை அடைவதை தாமதப்படுத்தும் கூறுகள் இவற்றில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து விலங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் செல்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. வயதான எலிகளின் ஆயுள் மேம்பட்டுள்ளது. ஆனால் மனிதர்களிடம் இது முதுமையை தாமதப்படுத்துமா என்பது குறித்த பரிசோதனைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளது. 

சைலோசெபினை பயன்படுத்தி தீவிரமான சோர்வு பதற்ற மனநிலை மன அதிர்ச்சி பாதிப்பு மூளை நரம்பு பாதிப்பு மற்றும் அல்சைமர் போன்ற நரம்பு சிதைவு நோய்களுக்கு மருந்து கண்டறிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த காளான் உலகளாவிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. 

எந்த காரணம் கொண்டும் இந்த காளான்களை போல தோன்றும் காளான்களை உண்ணக்கூடாது. அது உயிர் ஆபத்தை விளைவிக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.