உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..??
சிங்கப்பூரில் 12 வயதும் அதற்குக் கீழ் உள்ள தகுதியுடைய ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் $500 ‘சைல்ட் லைஃப்எஸ்ஜி’ (Child LifeSG) நிதியுதவி ஜூலை 14 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய நிதியுதவி திட்டத்தை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் (MSF) வெளியிட்டுள்ளது.
அரசின் இந்த நிதி உதவியை அன்றாட வீட்டுச் செலவுகளான மளிகை பொருட்கள், மருந்து மாத்திரைகள் மற்றும் வீட்டின் பயனீட்டுக் கட்டணங்களை (Utilities) செலுத்தப் பயன்படுத்தலாம்.
கடைகள் மற்றும் இணைய வணிகங்களில் PayNow UEN QR அல்லது NETS QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் இந்த LifeSG கிரெட்களை மிக எளிதாகப் பயன்படுத்த முடியும்.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் (Budget 2026) பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தபடி, குழுமங்களின் பிள்ளைகளை வளர்க்கும் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.