மலேசியா சட்டத்தின் கீழ் மட்டுமின்றி, இந்த சம்பவம் நடைபெற்ற சிங்கப்பூர் சட்டங்களின் படியும் இத்தகைய ஆபத்தான நடத்தையானது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.
பிறரின் உயிருக்கோ அல்லது தனிநபர் பாதுகாப்புக்கோ ஆபத்து விளைவிக்கும் வகையில், பொறுப்பற்ற அல்லது அலட்சியமான முறையில் செயல்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டம் – பிரிவு 336 ன் கீழ், 6 மாதங்கள் வரை சிறை தண்டனை, $2,500 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.
நெடுஞ்சாலையின் முதல் வழித்தடத்தில் செல்லும் மற்ற வாகனங்களை லேசர் மூலம் அச்சுறுத்தி, வேண்டுமென்றே அவர்களுக்கு தொல்லை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக துன்புறுத்ததில் இருந்து பாதுகாக்கும் சட்ட பிரிவு 3 – ன் கீழ் குற்றவாளிக்கு $5,000 வரை கடுமையான அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஓட்டுநரின் பார்வையைத் தற்காலிகமாகப் பறித்து, வாகன கட்டுப்பாட்டை இழக்க செய்யும் இந்த செயல் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் அல்லது மற்ற சாலைப் பயனாளிகளுக்கு ஆபத்து விளைவித்தல் என்ற பிரிவின் கீழும் கொண்டுவரப்படும்.
காணொளியில் உள்ள காரின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, இத்தகைய ஆபத்தான செயலலில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இணையவாசிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியப் போக்குவரத்து காவல்துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.