இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!!

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!!

சிங்கப்பூரின் முன்னணி பல்பொருள் அங்காடி நிறுவனமான ஃபேர்பிரைஸ் குழுமம் (FairPrice Group) வாடிக்கையாளர்கள் விலைகளை எளிதாக ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் வகையில், அலகு விலை நிர்ணயத் திட்டத்தை (Unit Pricing Intiative) நாடு முழுவதும் உள்ள தனது அனைத்து கடைகளிலும் விரிவுப்படுத்துகிறது.

தங்களது சோதனை திட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக FairPrice நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது.

அலகு விலை நிர்ணயம்: ஒரு பொருளின் மொத்த விலையுடன் சேர்த்து, அதன் ஒரு கிராம் அல்லது ஒரு லிட்டர் போன்ற அடிப்படை அலக்குகான விலையும்(e.g.,$X per kg/per litre) விலை அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும்.

இதன் மூலம் வெவ்வேறு பிராண்டுகள் மற்றும் வெவ்வேறு எடை உள்ள பாக்கெட்டுகளின் விலைகளை வாடிக்கையாளர்கள் மிக எளிதாக ஒப்பிட்டு தங்களுக்கு லாபகரமான பொருளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

முந்தைய சோதனை முறையில் அரிசி, இறைச்சி, முட்டை, சமையல் எண்ணெய், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட 27 வகையான அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டுமே இந்த முறை பயன்படுத்தப்பட்டது.

தற்போது இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மாவு, ரொட்டி, பால், குழந்தைகளுக்கான அணையாடை (Diapers), குளியல் சோப்பு மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட 40 பொருள் வகைகளுக்குப் பயன்படுத்தப்படும் என ஃபேர்பிரைஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் போட்டி, நுகர்வோர் ஆணையம் (CCCS) மற்றும் நுகர்வோர் சங்கம் (CASE) ஆகியவற்றுடன் இணைந்து கடந்த ஆண்டு (2025) செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்த முன்னோடி திட்டத்திற்கு, நுகர்வோரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையெடுத்து இயற்பியல் அங்காடிகள் மட்டுமின்றி, இணைய வர்த்தகத் தளங்களிலும் இந்த அலகு விலை முறையைக் கொண்டு வர உள்ளது.


வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்து வரும் வேளையில், நுகர்வோர் தங்களின் ஒவ்வொரு டாலரையும் சிக்கனமாகப் பயன்படுத்தவும், சில்லறை வர்த்தகத்தில் விலை வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் இந்த திட்டம் பெரிதும் உதவும்.