தனிமை கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை பாடங்கள்..!!

தனிமை கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை பாடங்கள்..!!

தனிமை என்பது யாரும் இல்லாத நிலை மட்டுமல்ல, நம்மை நாமே அதிகமாக சிந்தித்துக்கொள்ளும் நேரமும் கூட. உறவுகள், நட்புகள் என நெருங்கிப் பழகும் கூட்டத்தின் நடுவில் இருந்தாலும் கூட சில மனங்கள் அமைதியாக தனித்து நிற்கும்.

அந்த அமைதி சில நேரங்களில் வலியாக தெரிந்தாலும், அது தான் மனிதனுக்கு அவனது உண்மையான சுபாவத்தை அறிமுகம் செய்து வைக்கிறது.

பேசுவதற்கு யாரும் இல்லாத இரவுகளில், நினைவுகள் நம்முடன் பேசத்தொடங்கும். அப்போதுதான் தனிமைக்கும் ஒரு மொழி இருக்கிறது என்பது நமக்குப்புரியும்.

அது சத்தமே இல்லாமல் நம் மனதோடு முழுமையாகப் பேசி விடும். மௌனம், சிந்தனை, உணர்வுகள் வழியாகவும் வெளிப்படும்.

தனிமையின் மொழி என்பது சோகம் மட்டுமல்ல, தன்னைத்தானே அறிந்து கொள்ளும் ஓர் அமைதியான உரையாடலாகவும் அமையும்.

வாழ்க்கையில் அனைவரும் ஒரு கட்டத்தில் தனிமையை சந்திப்பார்கள். ஆனால் அந்த தருணத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே நம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

எல்லா கேள்விகளுக்கும் பதில் வெளியே கிடைக்காது. சில பதில்கள் தனிமையில் நம் மனதோடு பேசும்போதுதான் கிடைக்கும்.

தனிமையை வெறுக்காதீர்கள்… சில நேரங்களில் அது வாழ்க்கை தரும் மிக அழகான பரிசாகவும் இருக்கலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK