சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் ஈசூன் காபி கடையில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரின் ஈசூன் (Yishun) பகுதியில் உள்ள ஒரு காபி கடையில் நேற்று(ஆகஸ்ட் 6) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று (ஆகஸ்ட் 6) மாலை சுமார் 06:55 மணியளவில், ஈசூன் அவென்யூ 5 , பிளாக் 732 – இன் தரைத்தளத்தில் அமைந்துள்ள ஒரு காபி கடையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு(SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.

SCDF அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்கு முன்பாகவே, அங்கிருந்த தானியங்கி நீர் தெளிப்பான் அமைப்பு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்த விபத்தில் ஒரு நபர் காயமடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு (khoo Teck Puat Hospital ) அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்த தானியங்கி நீர்த் தெளிப்பான் அமைப்பு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் அந்த இடத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் குறித்து SCDF அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.