சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம்..!! டிக்கெட் இல்லாதவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பு.!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61ஆவது தேசிய தின அணிவகுப்பு (NDP 2026) வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியை நேரில் காண்பதற்கான டிக்கெட் கிடைக்காத பொதுமக்களும் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் வகையில், தீவு முழுவதும் 5 முக்கிய Heartland Celebration இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ன்னென்ன நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்? இந்த Heartland Celebration நிகழ்ச்சிகள் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். குறிப்பாக Bishan பகுதியில் மாலை 4 மணிக்கு Red Lions parachute jump நிகழ்வையும் பொதுமக்கள் காண முடியும்.
மேலும், SAF, SPF மற்றும் SCDF ஆகியவற்றின் 12 வாகனங்கள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கிய Mobile Column, 5 வெவ்வேறு வழித்தடங்களில் பயணித்து இந்த Heartland பகுதிகளை சென்றடையும். அங்கு அவை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும்.
இதன் மூலம் தேசிய மைதானத்தில் நடைபெறும் NDP 2026 நிகழ்ச்சியை நேரில் காண முடியாதவர்களும், தங்களது குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே தேசிய தினத்தின் உற்சாகத்தையும் கொண்டாட்டங்களையும் அனுபவிக்க முடியும். மேலும் Heartland Celebration-களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.