சிங்கப்பூர் வேலைக்கு Offer Letter வந்திருச்சா? இந்த 7 விஷயங்களை Check பண்ணுங்க.!!

சிங்கப்பூரில் வேலை கிடைத்துவிட்டதாக Offer Letter வந்ததும், பலரும் அடுத்தகட்ட ஏற்பாடுகளை உடனடியாக தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் Offer Letter-ஐ மட்டும் பார்த்து முடிவு செய்வதற்கு முன், வேலை தொடர்பான முக்கியமான தகவல்களை கவனமாகச் சரிபார்ப்பது அவசியம்.
குறிப்பாக சம்பளம், வேலை நேரம், Work Pass மற்றும் Employment Contract போன்ற விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், Singapore செல்வதற்கு முன்பே அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அதனால் Singapore வேலை Offer Letter கிடைத்தவுடன் இந்த 7 விஷயங்களை Check பண்ணுங்கள்.
1. நிறுவனத்தின் பெயர் மற்றும் வேலை விவரங்களை சரிபார்க்கவும்:
Offer Letter-ல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயர், Job Title, வேலை செய்யும் இடம் மற்றும் வேலைக்கான பொறுப்புகள் ஆகியவற்றை கவனமாகப் பாருங்கள்.
நீங்கள் விண்ணப்பித்த வேலைக்கும் Offer Letter-ல் குறிப்பிடப்பட்டுள்ள வேலைக்கும் வேறுபாடு உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும்.
2. சம்பள விவரங்களை தெளிவாகப் பாருங்கள்: Offer Letter அல்லது Employment Contract-ல் Fixed Monthly Salary, Allowances மற்றும் Overtime தொடர்பான தகவல்கள் தெளிவாக உள்ளதா என்பதைப் பாருங்கள்.
“மாதம் S$3,000 வரை” போன்ற பொதுவான தகவல்கள் மட்டும் இருந்தால், அந்த தொகை Fixed Salary-ஆ அல்லது Allowance மற்றும் Overtime உள்ளிட்ட தொகையா என்பதை நிறுவனத்திடம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
Singapore MOM-ன் தகவல்படி, foreign employees-க்கான வேலை தொடர்பான முக்கிய நிபந்தனைகளில் salary விவரங்களும் அடங்கும்.
3. வேலை நேரம் மற்றும் விடுமுறை விவரங்களை Check பண்ணுங்கள்: ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை செய்ய வேண்டும், வேலை நேரம் எவ்வளவு, Overtime எப்படி கணக்கிடப்படும், Rest Day மற்றும் Annual Leave தொடர்பான விதிமுறைகள் என்ன என்பதைப் பாருங்கள்.
இந்த விவரங்கள் Employment Contract-ல் தெளிவாக இருப்பது முக்கியம்.
4. Work Pass என்ன என்பதை உறுதி செய்யுங்கள்: சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு உரிய valid work pass தேவைப்படுகிறது. Offer Letter கிடைத்துவிட்டது என்பதாலேயே Work Pass உறுதி செய்யப்பட்டதாக கருதக்கூடாது.
MOM-ன் அதிகாரப்பூர்வ Check Work Pass and Application Status சேவையின் மூலம் Work Pass application status மற்றும் pass validity போன்ற தகவல்களைச் சரிபார்க்க முடியும். Passport number அல்லது FIN மற்றும் Date of Birth பயன்படுத்தி status-ஐ பார்க்கலாம்.
5. Offer Letter மற்றும் MOM தகவல்கள் ஒன்றாக உள்ளதா?: இது மிகவும் முக்கியமான Check. உங்களுக்கு வழங்கப்பட்ட Offer Letter-ல் உள்ள Salary, Occupation மற்றும் Employer Details போன்ற தகவல்களையும், MOM-ல் காணப்படும் Work Pass / application தகவல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
இந்த தகவல்களில் வேறுபாடு இருந்தால், Singapore வருவதற்கு முன்பே employer அல்லது employment agent -யிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று MOM குறிப்பிடுகிறது. தகவல் உங்களுக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் employment offer-ஐ ஏற்காமல் இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
6. Accommodation மற்றும் பிற வசதிகளை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்யுங்கள்: வேலை வழங்குபவர் Accommodation, Transport, Food அல்லது Allowance போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தால், அவற்றின் நிபந்தனைகளை எழுத்துப்பூர்வமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
எந்த வசதிக்கு கட்டணம் உள்ளது, சம்பளத்தில் ஏதேனும் deduction செய்யப்படுமா என்பதையும் முன்கூட்டியே தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
வாய்மொழியாக மட்டும் கூறப்பட்ட தகவல்களை நம்பாமல், முக்கியமான வேலை நிபந்தனைகள் ஆவணங்களில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
7. Agent Fee குறித்து கவனமாக இருங்கள்: Singapore Employment Agencies சில சூழ்நிலைகளில் agency fee வசூலிக்கலாம். ஆனால் அதற்கும் விதிமுறைகள் உள்ளன.
MOM தகவலின்படி, Employment Agency ஒரு worker-ன் ஒவ்வொரு service year-க்கும் அதிகபட்சம் ஒரு மாத Fixed Monthly Salary, மொத்தமாக அதிகபட்சம் 2 மாத salary வரை agency fee வசூலிக்கலாம். இந்த fee தொடர்பான விவரங்கள் IPA Letter-லும் இடம்பெறலாம்.
மேலும், Work Pass application மற்றும் renewal-க்கான சில administrative costs employer-ன் பொறுப்பாகும்; அவற்றை worker-யிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ வசூலிக்கக் கூடாது என்று MOM குறிப்பிடுகிறது.
எனவே, யாராவது அதிகப்படியான தொகையை அவசரமாக செலுத்தச் சொன்னால், அதன் காரணம் மற்றும் அதிகாரப்பூர்வ விவரங்களை முதலில் சரிபார்க்கவும்.
Offer Letter வந்துவிட்டது என்பதற்காக மட்டும் உடனடியாக பணம் செலுத்தவோ, பயண ஏற்பாடுகளைச் செய்யவோ வேண்டாம்.
முதலில் Offer Letter, Employment Contract மற்றும் MOM-ல் கிடைக்கும் Work Pass தகவல்களை ஒப்பிட்டுப் பாருங்கள். ஏதேனும் தகவல் மாறுபட்டிருந்தால் Singapore செல்வதற்கு முன்பே employer அல்லது employment agent-யிடம் விளக்கம் பெறுங்கள்.
வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும்போது, “சம்பளம் எவ்வளவு?” என்பதுடன் “வேலை நிபந்தனைகள் என்ன?” என்பதையும் தெரிந்துகொள்வது முக்கியம்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
