சிங்கப்பூரில் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதா? பதற்றப்பட வேண்டாம்! உடனடியாகச் செய்ய வேண்டிய 4 முக்கிய நடவடிக்கைகள்!


சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படலாம். குறிப்பாக, அவசரமாக இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் பாஸ்போர்ட் இல்லாமல் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் பதற்றமடையாமல், உடனடியாகச் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் பின்பற்ற வேண்டிய 4 முக்கிய வழிமுறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
1. உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்!
முதலில் உங்களுடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டுவிட்டது என்பது தெரியவந்தவுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க வேண்டும்.
புகார் அளித்த பிறகு, அதற்கான நகலை (Police Report) கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தப் புகார் நகல் முக்கியமானதாக இருக்கும்.
2. இந்தியத் தூதரகத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்!
பாஸ்போர்ட் தொலைந்த விவரத்தைச் சிங்கப்பூரில் உள்ள இந்திய உயர் ஆணையத்திடம் (High Commission) உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் தொலைந்தது தொடர்பான விவரங்களைத் தெரிவித்து, அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. அவசரமாக இந்தியா செல்ல வேண்டுமா? புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்!
பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதால் அவசரமாக இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எமர்ஜென்சி சர்டிபிகேட் (Emergency Certificate) அல்லது புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களுடைய தேவைக்கு ஏற்ப இந்த இரண்டு ஆவணங்களில் பொருத்தமான ஒன்றுக்கு விண்ணப்பித்து, அடுத்தகட்ட பயண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
4. புதிய பாஸ்போர்ட் கிடைத்ததும் MOM அல்லது ICA-வில் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும்!
புதிய பாஸ்போர்ட் கிடைத்த பிறகு மற்றொரு முக்கியமான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள மனிதவள அமைச்சகமான MOM அல்லது குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமான ICA-வில் உங்களுடைய விசா தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
புதிய பாஸ்போர்ட் பெற்ற பிறகு இந்த நடவடிக்கையைத் தவறாமல் மேற்கொள்வது அவசியம்.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு!
பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் பதற்றமடையாமல், முதலில் காவல்துறையில் புகார் அளிப்பது முதல் இந்திய உயர் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிப்பது வரை ஒவ்வொரு நடவடிக்கையையும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.
அவசரமாக இந்தியா செல்ல வேண்டியவர்கள் எமர்ஜென்சி சர்டிபிகேட் அல்லது புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய பாஸ்போர்ட் கிடைத்ததும் MOM அல்லது ICA-வில் விசா விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
இந்தத் தகவல் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
