சிங்கப்பூரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்! HDB குடியிருப்பு அருகே நடந்த விபத்து.. 66 வயது ஓட்டுநருக்கு என்ன ஆனது?


சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதியில் HDB குடியிருப்புக்கு அருகே சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து புல்வெளிக்குள் புகுந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நவம்பர் 24ஆம் தேதி பிற்பகல் சுமார் 2:20 மணியளவில் உட்லண்ட்ஸ் ஸ்கொயரில் உள்ள புளோக் 908A அருகே நிகழ்ந்தது.
சாம்பல் நிறக் கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, குடியிருப்புக்கு அருகிலுள்ள புல்வெளிக்குள் புகுந்தது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்ததுடன், முன்பக்க பம்பரும் கழன்று விழுந்தது.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற 66 வயது ஆடவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவரைப் பரிசோதித்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
