சிங்கப்பூரில் டிசம்பர் 1 முதல் NRIC ஸ்டிக்கரில் அதிரடி மாற்றம்..!! ICA வெளியிட்ட அறிவிப்பு!


சிங்கப்பூரில் டிசம்பர் 1ஆம் தேதி முதல், அடையாள அட்டையின் (NRIC) முகவரி ஸ்டிக்கரில் முழுமையான அடையாள எண் இடம்பெறும் என குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ICA) அறிவித்துள்ளது.
தற்போது முகவரி ஸ்டிக்கரில் NRIC எண்ணின் ஒரு பகுதி மட்டுமே குறிப்பிடப்பட்டு வருகிறது. புதிய நடைமுறையின்படி, முழு NRIC எண்ணும் ஸ்டிக்கரில் அச்சிடப்படும்.
இந்த மாற்றம், டிசம்பர் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தங்களது குடியிருப்பு முகவரியை மாற்றி, புதிய முகவரிக்கு அனுப்பப்படும் தனிப்பட்ட அடையாளக் குறியீட்டை (PIN) பயன்படுத்தி சரிபார்ப்பை நிறைவு செய்பவர்களுக்குப் பொருந்தும்.
அதேபோல், சேதமடைந்த அல்லது தொலைந்த முகவரி ஸ்டிக்கருக்குப் பதிலாகப் புதிய ஸ்டிக்கர் கோருபவர்களுக்கும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும்.
பொதுத்துறையில் பகுதியளவு NRIC எண்களைப் பயன்படுத்துவதைக் குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பகுதியளவு அடையாள எண்கள் மூலம் ஒருவரைத் துல்லியமாக அடையாளம் காண்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஒரே மாதிரியான பகுதி அடையாள எண்கள் அல்லது ஒரே பெயர் கொண்டவர்கள் இருக்க வாய்ப்புள்ளதால், முழு NRIC எண்ணைப் பயன்படுத்துவது அடையாளத்தைச் சரிபார்க்க உதவும் என ICA தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே பகுதியளவு NRIC எண் இடம்பெற்றுள்ள முகவரி ஸ்டிக்கர்களும் தொடர்ந்து செல்லுபடியாகும். எனவே, பொதுமக்கள் அவற்றை மாற்றுவதற்காகப் புதிய ஸ்டிக்கருக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
டிசம்பர் 1 முதல் வழங்கப்படும் புதிய முகவரி ஸ்டிக்கர்களில் மட்டுமே இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
