பெண்களின் அழகுக்கே அழகு சேர்க்கும் ரோஜா இதழ்...!!!

பெண்களின் இதழை ரோஜா பூவுடன் ஒப்பிட்டு பேசுவது வழக்கம்.அப்படிப்பட்ட ரோஜா பூவில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல காரணிகள் உள்ளன. இது ஆன்டி ஆக்சிடண்ட்ஸ்,பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
ரோஜா இதழ் சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கிறது. அதன் பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களின் அழுத்தத்தைக் குறைக்கின்றன. இயற்கையான பளபளப்பைத் தருகின்றன. நீங்கள் வீட்டிலேயே ரோஜா இதழ்களை பயன்படுத்தி பேஸ் பேக் செய்யலாம்
✨️ ரோஜா இதழ் மற்றும் தேன் கலந்த பேக்:
👉 ஒரு கைப்பிடி ரோஜா இதழ்கள், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளுங்கள்.
👉 ரோஜா இதழ்களை ரோஸ் வாட்டரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
👉 பின்னர் தேனுடன் கலந்து இருபது நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
👉 இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
👉 இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்கும்.
✨️ ரோஜா கோதுமை தவிடு பேக்
👉 ஒரு கைப்பிடி ரோஜா உடன் ஒரு தேக்கரண்டி கோதுமை தவிடு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
👉 அதனுடன் சிறிது காய்ச்சாத பால் சேர்த்து கலக்கவும்.
👉 பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஆறவிடவும்.
👉 பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், உங்கள் முகம் கண்ணாடி போல ஜொலிக்கும்.
✨️ ரோஜா ஆலோவேரா பேக்
👉 ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை கசக்கி அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்க்கவும்.
👉 இதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டரைச் சேர்த்து கலக்கவும்.
👉 இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
✨️ ரோஜா இதழ் மற்றும் மஞ்சள் தூள் பேக்
👉 ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை கசக்கி அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது காய்ச்சாத பால் சேர்த்து கலக்கவும்.
👉 இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
✨️ ரோஜா இதழ்கள் மற்றும் சந்தனம் கலந்த பேக்
👉 ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை கசக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடியைச் சேர்க்கவும்.
👉 பிறகு இதனுடன் சிறிதளவு காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
👉 இந்தக் கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
👉 இது முகத்தில் அரிப்பை நீக்கி பளபளப்பாக மாற்றும்.
✨️ ரோஜா இதழ் மற்றும் தயிர் பேக்
👉 இந்த பேக் ஒரு சிறந்த இயற்கை பிளீச்சிங்காக செயல்படுகிறது.
👉 இரண்டு தேக்கரண்டி ரோஜா இதழ்களை நன்றாக மசித்து, ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
👉 இந்தக் கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
👉 மேலே குறிப்பிடப்பட்ட ரோஜா ஃபேஸ் பேக்குகள் முகத்திற்குப் பொலிவைச் சேர்ப்பதுடன் சுற்றுச்சூழலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan