எதிஹாட் விமானத்தில் பயணம் செய்த பறவை..!!!

எதிஹாட் விமானத்தில் பயணம் செய்த பறவை..!!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மொராக்கோவுக்குப் பயணம் செய்த ஒருவர் தனது பருந்தை எதிஹாட் விமானத்தில் ஏற்றிச்சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பருந்துக்கு பாஸ்போர்ட் கூட இருந்தது. அதில் அந்த பருந்து ஸ்பெயினைச் சேர்ந்த ஆண் பருந்து என்ற தகவல் இருந்தது.

அந்தப் பருந்து பார்வையிட்ட மற்ற நாடுகள் பற்றிய தகவல்களும் பாஸ்போர்ட்டில் இருந்துள்ளது.

தற்போது இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“என்னை விட அந்தப் பறவை அதிக நாடுகளுக்குச் சென்றுள்ளது!” என்று ஒருவர் கூறினார்.

“இப்படித்தான் நாம் விலங்குகளை மதிக்க வேண்டும்,” என்று மற்றொருவர் கூறினார்.

மேலும் சிலர் ” என்ன பறவைகளுக்கு பாஸ்போர்ட்டா?” என்பது போல் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.