Jetstar Asia விமானம்!! திடீர் அறிவிப்பு!!

Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Jetstar Asia ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்திற்கு சொந்தமானது. இது சிங்கப்பூரில் இருந்து இயங்கி வருகிறது.
Jetstar Asia வின் 13 Airbus A320 விமானங்கள் படிப்படியாக ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் மாற்றிவிடப்படும் என்று Qantas சொன்னது.
அதிகரித்து வரும் விநியோகச் செலவுகள், விமான நிலையக் கட்டணங்கள் அதிகரிப்பு,கூடுதல் போட்டி ஆகியவற்றால் Jetstar Asia பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Jetstar Asia தலைமை நிர்வாக அதிகாரி, விநியோகச் செலவுகள் சுமார் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார்.
Qantas நிறுவனம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு Jetstar Asia சேவையைத் தொடங்கியது.
முன்கூட்டியே விமான டிக்கெட்டுகளை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு முழுத்தொகையும் திரும்ப கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு மாற்று விமானங்களை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
