யெமி தியேட்டரில் தடை செய்யப்பட்ட நிகழ்ச்சி…!! காரணம்…??

யெமி தியேட்டரில் தடை செய்யப்பட்ட நிகழ்ச்சி...!! காரணம்...??

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் உள்ளூர் கலைக் குழுவான Wild Rice, Infocomm Media Development Authorityக்குச் சமர்ப்பித்த ஸ்கிரிப்ட் ஒன்று கலை பொழுதுபோக்கு வகைப்பாடு குறியீட்டை மீறியதற்காக அந்த
நிகழ்ச்சியானது ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது.

Infocomm Media Development Authority மற்றும் உள்துறை அமைச்சகம் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் வைல்ட் ரைஸ் இந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று “ஹோம்பார்” என்ற தலைப்பில் ஒரு வாசிப்பு ஸ்கிரிப்டை சமர்ப்பித்ததாக கூறப்பட்டது. அதிகாரசபை அதற்கு “R18” மதிப்பீட்டை வழங்கியது மற்றும் நிகழ்ச்சியை அங்கீகரித்தது.

இருப்பினும், இந்த மாதம் 5 ஆம் தேதி, Wild Rice தியேட்டர் அதிகாரிகளிடம் திருத்தப்பட்ட காட்சியை சமர்ப்பித்தது.

மேலும் அதன் உள்ளடக்கம் முந்தைய பதிப்பிலிருந்து கணிசமாக வேறுபட்டது.

புதிய காட்சியில் போதைப் பழக்கம் தொடர்புடைய காட்சிகள் உள்ளது.மேலும் அதில் மத்திய போதைப்பொருள் பணியகம் போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிவதைத் தவிர்க்க ரகசியமாகப் பாதுகாக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இது நாட்டின் போதைப்பொருள் எதிர்ப்புக் கொள்கைக்கு முரணானது என்று கூறப்பட்டது.

மேலும் இது போன்ற காட்சிகள் போதைப்பொருள் மறுவாழ்வு முறையைப் பாதிப்பது மட்டுமல்லாமல்,போதைப்பொருள் பணியகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் அசைக்கக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கலை பொழுதுபோக்கு வகைப்பாடு வழிகாட்டுதல்களின்படி, தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய காட்சிகள் அனுமதிக்கப்படாது என்று கூறியது.

Infocomm Media Bureau,உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்தது.

முன்னர் “R18” என மதிப்பிடப்பட்ட காட்சிகளைக் கொண்டு தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று Wild Rice க்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் Wild Rice அவ்வாறு செய்யாததால் அந்த நிகழ்ச்சி தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.