மக்களை ஈர்க்கும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் எந்த இடத்தில் உள்ளது…??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!

மக்களை ஈர்க்கும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் எந்த இடத்தில் உள்ளது...??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்...!!

சிங்கப்பூர்:மக்களை வெகுவாக ஈர்க்கும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

நகரத்திற்கு புதியவர்களை ஈர்ப்பது மற்றும் ஏற்கனவே உள்ள குடியிருப்பாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த ஆய்வை ஜென்ஸ்லர் நடத்தினார்.

மேலும் இந்தப் பட்டியலில் தைவானின் தைபே முதலிடத்தில் இருப்பதாகவும், பதிலளித்தவர்களில் 64 சதவீதம் பேர் தொடர்ந்து அந்த நகரத்திலேயே வாழத் திட்டமிட்டுள்ளதாகவும் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் வியட்நாமில் உள்ள ஹோ சின் மின் நகரம் உள்ளது.அங்கு 61 சதவீத குடியிருப்பாளர்கள் தங்க விரும்புவதாகக் கூறினர்.

சிங்கப்பூர் 59 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.கணக்கெடுக்கப்பட்ட சிங்கப்பூரர்களில் 77 சதவீதம் பேர் சிங்கப்பூரில் வாழ்வதில் திருப்தி அடைவதாக அல்லது மிகவும் திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த நகரங்களில் வசிக்கும் பலர் இந்த நகரம் தங்களுக்குப் பொருத்தமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும் பட்டியலில் உள்ள நகரங்கள் வேலை வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், நல்ல மனித உறவுகளையும் கொண்டுள்ளதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களை ஈர்க்கும் நகரங்களில் சிங்கப்பூர் எத்தனையாவது இடத்தில் உள்ளது…??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan