Scoot விமானங்கள் ரத்து!! எந்த நாட்டுக்கு இடையே? என்பதை தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

Scoot விமானங்கள் ரத்து!! எந்த நாட்டுக்கு இடையே? என்பதை தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்....

சிங்கப்பூர் மற்றும் ஜித்தா(Jeddah) நகருக்கும் இடையேயான 2 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளதாக Scoot விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

TR596 மற்றும் TR597 சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.

கத்தாரில் உள்ள Al Udeid ஆகாயப் படைத்தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக மத்தியக் கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

அதனைக் கருத்தில் கொண்டு விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளதாக நிறுவனம் கூறியது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று பயண ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று அது தெரிவித்தது.

பயணத்தைத் தொடர விரும்பாதவர்கள் முழு பணத்தையும் திரும்பப் பெறலாம் என்றும் கூறியது.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே அதன் முதன்மையான கடமை என்று நிறுவனம் கூறியது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan