ஜப்பானில் தென்மேற்குப் பகுதியில் ஐந்து புள்ளி ஐந்து ரிட்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைப் பற்றி ஜப்பானிய வானிலை ஆய்வகவும் தெரிவிக்கும் பொழுது ககோஷிமா மாநிலத்தின் தொக்காரா தீவுக் கூட்டம் அருகே நில நடுக்கமானது மையம் கொண்டிருந்தது என்று அறிவித்தது.
அகுசெக்கி தீவில் சுமார் 20 கிலோ மீட்டர் வரையில் நிலநடுக்கத்தை உணர முடிந்துள்ளது. மேலும் அங்கு 89 பேர் மட்டுமே வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்ற மாதம் 21ஆம் தேதி முதல் இன்று வரை அந்த வட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.