சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி…!!!46 வயது நபர் சிக்கியது எப்படி…??

சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி...!!!46 வயது நபர் சிக்கியது எப்படி...??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பல்பொருள் அங்காடியில் சுயசேவை செக்அவுட் வசதியை தவறாக பயன்படுத்தி பலமுறை குறைவான தொகையை மட்டும் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 46 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி உட்லேண்ட்ஸ் தெரு 82 இல் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இவர் தன்னிச்சையாக சில பொருட்களை ரத்து செய்து, $34 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு பதிலாக வெறும் 0.6 சென்ட் மட்டுமே செலுத்தியதை அங்காடி ஊழியர் ஒருவர் கவனித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையின் தொடக்க விசாரணையில், ஜனவரி 2 முதல் மார்ச் 21 வரை குறைந்தது 26 முறை இந்த மோசடி முறையைப் பயன்படுத்தியதும், ரத்து செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு $500 வரை இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில், அவர்மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இன்று (17.07.25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan