இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
ஜூலை 24 ,25 ஆம் தேதிகளில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மூன்று டன் எடையுள்ள காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சோதனையை சிங்கப்பூர் உணவு அமைப்பு குடி நுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் இணைந்து நடத்தியது.
அவர்கள் அளித்த அறிக்கையில் சரக்கு வாகனம் ஒன்றில் அறிவிக்கப்படாத காய்கறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டனர்.
அதில் கத்திரிக்காய் வெள்ளரிக்காய் பயிற்றங்காய் ஆகியவை இருந்தன.
சில்லரை விற்பனை கடைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் காய்கறி களைவு ஏற்றி வரும் கனரக வாகனங்களில் கூட்டு சோதனைகள் நடத்தப்பட்டதாக அமைப்பு குறிப்பிட்டன.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகள் முறைகேடு இருப்பதை அறிந்து சரக்கு வாகனத்தின் கூடுதல் சோதனை நடத்தப்பட சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் அதை அனுப்பினார்.