பொங்கோல் சாலையில் பேருந்து மீது மோதிய கார்!! 28 வயது பெண் மரணம்!!

பொங்கோல் சாலையில் பேருந்து மீது மோதிய கார்!! 28 வயது பெண் மரணம்!!

பொங்கோல் சாலையில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 28 வயதுடைய பெண் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஏப்ரல் 13 ஆம் தேதி மதியம் சுமார் 2.50 மணியளவில் நடந்தது.

பேருந்து பின்னால் வந்த கார் தீடிரென பேருந்தின் பின்னால் மோதியது.

30 வயதுடைய கார் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்ததாகவும் காரில் பயணம் செய்த பெண் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காரின் முன்பகுதி மிக மோசமாக சேதமடைந்திருப்பதாக சம்பவத்தை நேரில் கண்டதாக கூறினர்.

காரின் சில பகுதிகள் சாலையில் சிதறி கிடந்தன.காரில் இருந்த பாதுகாப்பு காற்றுப்பைகள் வெடித்து கிடந்ததாகவும் , ஓட்டுநர் இருக்கையில் இருந்த காற்றுப் பையில் ரத்தக்கறை இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

அந்த காரில் மின்சிகரெட்டுகள் கிடந்ததாகவும் காவல்துறை கூறியது. இது குறித்து சுகாதார அறிவியல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்படும் என்று கூறியது.