சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனிக்கிடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இருநாடுகளும் மேலும் நெருக்கமாக பணியாற்றலாம் என பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியான் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் மெர்ஸுடன் தொலைபேசி உரையாடல் நடத்திய பிரதமர் வோங், உரையாடல் இனிமையானதாக இருந்தது என கூறினார்.