சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!
MCE விரைவுச் சாலையில் 15ஆம் தேதி மாலை கார் விபத்தில் சிக்கியது அப்போது 56 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் இந்த விபத்தினால் சுரங்கப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று டிக் டாக்கில் வைரல் ஆகி வருகிறது.
நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் கார் விபத்து ஏற்பட்டது.
மேலும் பின் ஹாய் எக்ஸ்பிரஸ்வே சுரங்கப்பாதையில் விபத்தால் பாதிக்கப்பட்டது இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
டிக் டாக் வீடியோ படி சுரங்கப்பாதையில் உள்ள பல வாகனங்கள் மெதுவாக முன்னோக்கி நகர்கின்றன மேலும் மின்னணு காட்டி திரைப் போக்குவரத்து விபத்தை காட்டுகிறது முதல் மற்றும் இரண்டாம் பாதைகளை தவிர்க்குமாறு ஓட்டுநரை எச்சரிக்கிறது.
குறைந்தது நான்கு கார்கள் மற்றும் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை வீடியோவில் தெரிகிறது.
மேலும் காயம் அடைந்த ஒருவர் தரையில் கிடந்தார் மேலும் மீட்பவர்கள் அவர் பக்கத்தில் இருந்தனர்.
56 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநலையுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.